செங்கல்பட்டு பகுதியைச்சேர்ந்த தம்பதியர் கண்ணன், சுப்புலட்சுமி. இவர்கள் பரனூர் பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று அக்டோபர் 8ஆம் தேதி, பிற்பகல் சுப்புலட்சுமி, தனது கடைக்குச்செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
தனியார் பள்ளி ஒன்றின் அருகே வரும்போது அவரது கம்மல் கழன்று கீழே விழுந்துள்ளது. சாலையில் விழுந்த கம்மலை எடுப்பதற்காக சுப்புலட்சுமி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சுப்புலட்சுமி கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பறந்தனர்.