செங்கல்பட்டு:கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உள் துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா, கூட்டுறவு - உழவர் நலன் இயக்குநர் விஜய் ராஜ் மோகன் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய மத்திய குழுவினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.