சென்னையை சேர்ந்தவர் வின்சன்ட் பாபு. இவர் நண்பர்கள் மூவருடன் கோயம்புத்தூர் சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிந்தார். .
இன்று (பிப்.25) அதிகாலை, மாமண்டூர் அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இந்த விபத்தில், வின்சன்ட் பாபு, சண்முகசுந்தரம் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.