செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிஷங்கர். இவருடைய மகன் ஆகாஷ் (15), பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் ஆகாஷ் தனது நண்பர்களுடன் வெடால் என்ற பக்கத்து ஊரின் கிணற்றில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி! - etv news
செங்கல்பட்டு: செய்யூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, கிணற்றில் விழுந்த ஆகாஷ் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, ஆகாஷின் உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டரில் புளூ டிக்கிற்காக சண்டைபோடும் மோடி அரசு, தடுப்பூசியில் கோட்டை விட்டுவிடுகிறது என, ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.