தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, கறுப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிக்க முடிவு! - செங்கல்பட்டு அண்மை செய்திகள்

செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, அதனைச் சுற்றியுள்ள 14 கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

கருப்புக்கொடி ஏற்றி  தேர்தல் புறக்கணிக்க முடிவு!
கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிக்க முடிவு!

By

Published : Mar 4, 2021, 8:56 AM IST

செங்கல்பட்டில் கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கில மேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், மணமை, கடும்பாடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்கள் உள்ளன.

அவசர காலங்களில் இங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற முடியாது என்பதால், இனி அப்பகுதிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை விதித்து மத்திய- மாநில அரசுகள் பத்திரப்பதிவு அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.

கறுப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிக்க முடிவு!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராம மக்கள், ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

தேர்தலை மட்டும் புறக்கணிப்பதால் எந்தப் பயனும் இல்லை, அணுஉலைகளே வேண்டாமென முடிவெடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் கிராம மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :'சசிகலாவின் முடிவு எனக்கு சோர்வு' -டிடிவி வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details