தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுவங்கரணையில் கிளியாற்றின் நடுவே தடுப்பணை! - காணொலி காட்சி மூலம் அடிக்கல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த பசுவங்கரணையில், கிளியாற்றின் குறுக்கே, ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

barrier-in-the-middle-of-the-kiliyaru-river
barrier-in-the-middle-of-the-kiliyaru-river

By

Published : Feb 14, 2021, 4:34 PM IST

மதுராந்தகம் அடுத்த பசுவங்கரணையில் கிளியாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வரும் நீர், தடுப்பணை இல்லாததால் வீணாவதாக 5 கிராம மக்கள் வேதனையில் இருந்தனர்.

கிராம மக்களின் கோரிக்கையை அடுத்து, கிளியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று அரசு அறிவித்தது. 118 மீட்டர் நீளமும், ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணைக்கு நேற்று (பிப்.13) அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.5.50 கோடி மதிப்புடைய இந்த தடுப்பணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பசுவங்கரணையில் கிளியாற்றின் நடுவே தடுப்பணை

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். அடிக்கல் நாட்டப்பட்ட இடம் ஆற்றின் நடுவில் இருந்ததால், வாகனங்கள் செல்ல வழி இல்லை. இதனால், நிகழ்ச்சிக்கு வருகை தந்த திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், அருகில் நின்றிருந்த டிராக்டர் ஒன்றில் அமர்ந்து அடிக்கல் நாட்டும் இடத்திற்கு சென்றார்.

இதையும் படிங்க: '60 நொடியில் 36 விரிவாக்கங்கள்': சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details