தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடியோ கால் மூலம் பிரசவம் - மரணமடைந்த சிசு - பிரசவம் பார்த்த செவிலியர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவர் வீடியோ காலில் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்; பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்; பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

By

Published : Sep 20, 2022, 7:14 PM IST

செங்கல்பட்டு: சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர் இரண்டாவது முறையாக தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார். இவருக்கு நேற்று (செப்‌ . 19) ஆம் தேதி பிரசவ வலி எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புஷ்பாவை அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர்கள் புஷ்பாவிற்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் போது சிக்கல் இருந்ததால் செவிலியர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவரை நாடியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பாவின் உறவினர்கள், செவிலியர்கள் பதறிப்போய் மருத்துவர் பாலு என்பவரை செல்போனில் அழைத்ததாகவும், ஆனால் அவர் நேரில் வராமல் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்க்க ஆலோசனை வழங்கியதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இதன் மூலமாகவும் குழந்தை சரியாக பிறக்காமல், கால் முதலில் வெளியே வந்துள்ளதாக புஷ்பாவின் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் புஷ்பாவை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...

இதனால் அதிர்ச்சியடைந்த முரளியின் உறவினர்கள் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று இல்லீடு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரும் மருத்துவ துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சினிமா பாணியில், பிரசவம் பார்ப்பதற்கு வீடியோ காலில் ஆலோசனை வழங்கிய மருத்துவரால் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது.

இதையும் படிங்க:போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது

ABOUT THE AUTHOR

...view details