செங்கல்பட்டு: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷ் என்பவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் என்பவரின் மனைவிக்கு உறவினர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளையைப் பற்றி விசாரித்து வந்த தனிப்படையினர், இன்று தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து மூன்று கிலோவுக்கும் அதிகமான நகைகளைக் கைப்பற்றினர்.