செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கரோனா தொற்று பரவாமல் இருக்க மதுராந்தகத்தில் உள்ள 24 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு அனைத்துக் கடைகள், வீடுகள், வாகனங்கள் என மக்கள் பயன்பாட்டில் இருக்கும் முக்கிய இடங்களில் மருந்து தெளிக்கப்பட்டன. மேலும், வீதிகளில் வலம் வருவோரை காவல் துறையினர் விரட்டி அனுப்பி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயணைப்பு வீரர்கள் கரானோ வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளித்தனர்.
கிருமி நாசினி தெளித்த தீயணைப்பு துறையினர் அப்போது பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீடுகளிலேயே தனிமையை கடைபிடித்து சுகாதாரத்தை பேணிக்காத்து நோய் பரவலை தடுக்குமாறு தீயணைப்புத் துறையினர் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கிருமி நாசினி தெளித்த சட்டப்பேரவை உறுப்பினர்