செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், செய்யூர் தொகுதி வேட்பாளர் கணித சம்பத் மற்றும் திருப்போரூர் தொகுதி வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் விவசாயி. எதிரணியில் வியாபாரி முதலமைச்சர் வேட்பாளர். விவசாயிகளுக்கு, முதலாளிகளுக்கும் நடக்கின்ற போராக இந்தத் தேர்தல் உள்ளது.
அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களையும் விவசாயிகள் நம்பியுள்ளது. ஆனால் திமுக வெளிமாநிலத்தில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் என்னும் ஒரு தனி நபரை நம்பி செயல்படுகிறது. ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை. வெறும் பொய்களை மட்டுமே பேசி பரப்புரை செய்து வருகிறார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வெறி பிடித்திருக்கிறது.
திருக்கழுக்குன்றம் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் சாலையில் நடமாட முடியாது. நிலங்களை அபகரித்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆட்சியாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்