செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் மேன்பவர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலதிபரான இவர் தனது திருமண நாளான இன்று (ஏப்.24) மறைமலைநகர் ஶ்ரீ செல்வமுத்து குமரசுவாமி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட தனது மனைவி, மகன், மகளுடன் சென்றார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் கூடவே இருக்க அனுமதியுண்டு .
’இருந்தபோதிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்போதே நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திருமாறன் மீது குண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்ததுவிட்டு தப்பியோடினர்.
தப்பிச் சென்ற கும்பலை திருமாறனின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல் துறையினர், உயிரிழந்த திருமாறனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவானைக்கு அனுப்பிவைக்க முயன்றபோது, அவரது உறவினர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.