டாக்டர் அம்பேத்கரின் 64ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (டிச. 06) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட செய்யூரில் அம்பேத்கர் சிலைக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர்த்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், செய்யூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு கொட்டும் மழையில் மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளர் விஜிகே. செந்தில்நாதன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மலர்த்தூவி அஞ்சலி! - Ambedkar 4th year memorial day
அம்பேத்கரின் 64ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு செங்கல்பட்டிலும், மயிலாடுதுறையிலும் அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
admk
தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்