செங்கல்பட்டு:மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே, அனைத்துக் கட்சியினரும் மிகப் பிரமாண்டமாக தங்களது கட்சிக் கொடிகளை நட்டு வைத்துள்ளனர். போட்டி போட்டுக்கொண்டு, குறைந்தது 100 அடி உயரம் உள்ள பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இங்கு நடப்பட்டுள்ளன. இதில் அதிமுக சார்பாக நடப்பட்ட 100 அடி உயரம் உள்ள கொடிக்கம்பத்தில், கொடி சேதம் அடைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, மதுராந்தகம் பகுதியில் உள்ள அதிமுகவினர், இன்று(டிச.15) அந்தக் கொடியை மாற்றி வேறு கொடியை கிரேன் மூலம் கட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் மண் நெகிழ்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.