செங்கல்பட்டு: சார்பட்டா பரம்பரையில் நடித்த மாறன் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான 'கில்லி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர், அதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கானா பாடகராக வலம் வந்த இவர், பல மேடைக் கச்சேரிகளிலும் பாடியுள்ளார். கரோனா தொற்றுக்கு நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன் எனப் பலர் தொடர்ந்து உயிரிழந்தது திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.