செங்கல்பட்டு:பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடம் மற்றும் அதன் அருகிலேயே நீர்நிலை புறம்போக்கு நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப் ஆகியோர் இணைந்து சாலை அமைக்கும்போது, அதன் அருகே உள்ள நீர்நிலை புறம்போக்கையும் சேர்த்து ஆக்கிரமித்ததாக தெரிகிறது.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் திமுகவினரை தட்டி கேட்ட நபரைத் தாக்கும்- வீடியோ வைரல் அப்பொழுது அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைப்பதை அப்பகுதியை சேர்ந்த நபர்கள் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவரும், திமுக நிர்வாகி செல்வராஜ் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் அந்த நபரின் சட்டியை பிடித்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
அந்த நபரை சரமாரியாக தாக்கப்படுவதை சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுக்குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவின் ஆட்சியின் அராஜகம், ரவுடிசம் நாளுக்கு நாள் இப்பகுதியில் பெருகி வருகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பில் சந்தேகம் நீடிக்கிறது - விஜயதாரணி