செங்கல்பட்டு:கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்போரூர் கூட்ரோடு சென்றபோது செங்கல்பட்டில் இருந்து ஜல்லி பாரம் ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.