தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் வாங்கியவருக்கு உத்தரவாதம் அளித்தவர் மரணம்: உறவினர்கள் போராட்டம் - செங்கல்பட்டு ஸ்ரீராம் நிதி நிறுவனம்

ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவருக்கு உத்தரவாதம் அளித்தவர் உயிரிழந்த நிலையில், நிதி நிறுவனத்தின் தொந்தரவால் உயிரிழந்தாகக் கூறி உறவினர்கள் நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் முன் உறவினர்கள் போராட்டம்
ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் முன் உறவினர்கள் போராட்டம்

By

Published : Jan 4, 2022, 3:38 PM IST

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் பருக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரவி. இவர் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் மூலமாக டிராக்டர், ஜேசிபி இயந்திரத்தை கடன் அடிப்படையில் வாங்கியுள்ளார். கரோனா பொதுமுடக்கம், வருமானம் குறைந்ததால் ரவியால் கடனைக் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நிதி நிறுவனத்தில் ரவி வாங்கிய வாகனக் கடனுக்கு அவரது நண்பரான புத்தூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் உத்தரவாதம் அளித்து கையெழுத்துப் போட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நீலமேகத்தை, நிதி நிறுவனத்தினர் தொடர்புகொண்டு, ரவி வாங்கிய கடன் குறித்து கேட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் கேட்டுவந்துள்ளனர். இந்நிலையில் நீலமேகம் நேற்று முன்தினம் (ஜனவரி 2) மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து நிதி நிறுவனத்தின் தொந்தரவால் மனஉளைச்சல் ஏற்பட்டு நீலமேகம் உயிரிழந்ததாகக் கூறி, அவருடைய உறவினர்கள் நிதி நிறுவனத்தின் அச்சரப்பாக்கம் கிளை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் முன் உறவினர்கள் போராட்டம்

தகவலறிந்து சென்ற காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைவைத்தனர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவம்: ஊழியர் நாடகமாடியது அம்பலம்

ABOUT THE AUTHOR

...view details