செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாவலூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்கையில், சுமார் 80 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. தங்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
பின்னர் திருப்போரூர் தலைமைத் தேர்தல் அலுவலகத்திற்கு வாகனத்தை அலுவலர்கள் எடுத்துச் சென்ற நிலையில், தங்கக் கட்டிகளுக்கு உரிய ஆவணங்களைத் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியிடம் சமர்ப்பித்த பின்பு வாகனத்தை அனுப்பிவிட்டனர்.
விசாரணையில், பிரபல ஜிஆர்டி தங்க நகைக்கடை தனது கிளைகளுக்குத் தனியார் வேனில் தங்கத்தை அனுப்பிவைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கர்நாடக அமைச்சர் சிடி வழக்கு: பெண்ணின் பெற்றோர் வாக்குமூலம் பதிவு!