செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஒரத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருங்கை என்ற இடத்தில், நேற்று இரவு ஒரத்தி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியிலும், சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த லாரி ஒன்றின் ஓட்டுனர், காவல் துறையினரைக் கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார். தொடர்ந்து லாரியை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் மொத்தம் 152 கேன்களில், 35 லட்சம் மதிப்புள்ள ஐந்தாயிரத்து 320 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிய வந்தது.