செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் 49ஆவது ஆண்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
49ஆவது ஆண்டில் அதிமுக: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! - latest chengalpattu news
செங்கல்பட்டு: அதிமுகவின் 49ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
49-annual-day-for-admk-chengalpattu-cadres-celebration
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன. இதேபோல் அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா : சொந்த ஊரில் கொடி ஏற்றிய முதலமைச்சர்!