செங்கல்பட்டு மாவட்டம், பூதூர் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக வீடு ஒன்று உள்ளது. இரவு நேரத்தில் இந்த வீட்டிற்கு வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அப்பகுதி இளைஞர்கள் பல நாள்களாக கவனித்து வந்துள்ளனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்:
இந்நிலையில், இன்று (ஜூன்.13) சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று அங்கே வந்தது. அந்த வாகனம் சென்ற பின்னர் அப்பகுதியினர் அங்கே சென்று பார்த்தபோது, ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.