சென்னை: கரோனா தொற்று முற்றிலும் அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் சிறு சிறு அளவில் தொற்று பாதிப்பு தலைதூக்கி வருகிறது. சென்னை செங்கல்பட்டில் ஒப்பீட்டளவில் தொற்று சற்றே அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன.
செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனோ - Chengalpattu Private Medical College
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், 25 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
25 Medical Students tested Corono positive
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரியில், மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. சமீபத்தில், சென்னை ஐஐடியில் ஏற்பட்ட தொற்று பரவலால், 190-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.