செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கத்தில் 144 ஊரடங்கு தடை விதிக்கப்பட்டாலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இப்பகுதியில் தினந்தோறும் இருசக்கர வாகனங்கள் தடை உத்தரவை மீறி அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் கடந்த நாள்களில் மட்டும் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டதால் 350 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
144 தடை உத்தரவால் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் குவிந்து காணப்படுகிறது தற்போது அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் தடை உத்தரவை மீறியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் அவர்களின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அங்கு இருசக்கர வாகனங்கள் குவிந்து காணப்படுகின்றன.
இதையும் படிங்க:சர்வதேச நிதி சேவைகளுக்கு பிரத்யேக ஒழுங்குமுறை ஆணையம்...!