தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில்முனைவோருக்கு ரூ.1.49 கோடி கடன் உதவி - ஊரகத் தொழில் துறை அமைச்சர்

செங்கல்பட்டில் தொழில்முனைவோருக்கு ஒரு கோடியே 49 லட்சத்து நான்காயிரம் ரூபாய் கடன் உதவியை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

சுயதொழில் முனைவோருக்கு ரூ.1.49 கோடி கடன் உதவி
சுயதொழில் முனைவோருக்கு ரூ.1.49 கோடி கடன் உதவி

By

Published : Jun 29, 2021, 11:35 AM IST

செங்கல்பட்டு:திருப்போரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

கடனுதவி வழங்கிய தொழில் துறை அமைச்சர்

  • இதையடுத்து, கிராமப்புறத் தொழில்முனைவோர் கடன் உதவித் திட்டம் சார்பாக 280 பயணிகளுக்கு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாயும்,
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக இஸ்லாமிய பெண்கள் 321 பயனாளிகளுக்கு 30 லட்ச ரூபாயும்,
  • ஊரகப் புத்தாக்கத் திட்டம் சார்பாக 14 பயனாளிகளுக்கு ஆறு லட்சத்து நான்காயிரம் ரூபாய்

என மொத்தம் 636 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 49 லட்சத்து நான்காயிரம் ரூபாயை மகளிர் குழுவினருக்கு கடன் உதவித் தொகையான காசோலையை ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன், திட்ட இயக்குநர் செல்வகுமார், திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் செய்த திமுக அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details