தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை முயற்சி! - WORLD_RECORD

சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் யோகா மூலம் உலக சாதனை முயற்சி செய்த மாணவர்களுக்கு நகைச்சுவை நடிகர்கள் செந்தில், வையாபுரி ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.

மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை முயற்சி!

By

Published : Jul 8, 2019, 9:57 PM IST

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.எஸ்.கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்கள் யோகா மூலம் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தியாவில் உள்ள ஏழு யூனியன் பிரதேசங்கள் உட்பட 36 மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் 36 வகையான யோகாக்களை 36 மாணவர்கள் 36 நிமிடங்கள் இடைவிடாது செய்த புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சாதனை முயற்சியையுனிவர்சல் புக் ஆஃப் அச்சுவர்ஸ் ரெக்கார்டு புத்தகத்தினர் பதிவு செய்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

மாணவர்களின் உலக சாதனை முயற்சி

இந்த நிகழ்ச்சியின்போது அங்கு வந்த பார்வையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், நகைச்சுவை நடிகர்கள் செந்தில், வையாபுரி ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வையாபுரி ”இது வரை நீரை வீணடித்துவிட்டோம், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details