தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உலக சுற்றுச்சூழல் தினம்' - 100 நாள் உலக சாதனை முயற்சி - 100 நாள் உலக சாதனை

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுகாதாரமான இந்தியா, தூய்மை இந்தியா, பசுமை இந்தியா என்ற வாசகங்களை முன்னிறுத்தி 100 நாள் உலக சாதனை முயற்சியை தனியார் அமைப்பு மேற்கொள்கிறது.

babu

By

Published : Jun 5, 2019, 8:42 PM IST

ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது . ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் பூமியின் இயற்கை வளங்களை பாதுகாத்திடும் வகையில் 1972ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை அனுசரித்து வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதாரமான இந்தியா, தூய்மை இந்தியா, பசுமை இந்தியா என்ற வாசகங்களை முன்னிறுத்தி 100 நாள் உலக சாதனை முயற்சி செய்ய உள்ளதாக நான்கு நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

இது குறித்து யுனிவெர்சல் புக் ஆப் ரெகார்டஸ் அமைப்பின் நிறுவனர் பாபு பாலகிருஷ்ணன் கூறுகையில், குட் இந்தியா மூவ்மெண்ட், மகாத்மா காந்தி அகாடமி, யுனிவெர்சல் அச்சிவெர்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் ஆகிய நான்கு நிறுவனங்கள் சேர்ந்து சமூக சேவையில் 100 நாள் உலக சாதனை முயற்சி செய்ய உள்ளது. இந்த முயற்சியில் க்ளீன் இந்தியா, க்ரீன் இந்தியா, ஹெல்த் இந்தியா, வெல்த் இந்தியாவை உருவாக்கவுள்ளோம்.

பாபு பாலகிருஷ்ணன் பேட்டி

இன்று முதல் செப்டம்பர் 16 ஆம் தேதியான ஓசோன் தினத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முயற்சியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அனைத்து வீடுகளிலும் உள்ள தேவையில்லாத, உபயோகம் இல்லாத பொருட்களை எங்கள் அமைப்பு சார்பில் வந்து சேகரித்து கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு கோடி மரங்களை நடுவது, இந்தியர்களை துணி பைகளை உபயோக படுத்த வைப்பது, இந்திய பொருட்களை வாங்க வைப்பது, தூய்மை இந்தியா திட்டத்தை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது போன்றவற்றை செய்ய உள்ளோம், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும், சமூக ஆர்வலருமான காந்தி கனகராஜ், பியூச்சர் கலாம் அமைப்பின் நிறுவனர் உமா ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details