தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் - weather Report for Tamilnadu

சென்னை: தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை

By

Published : Jul 8, 2019, 3:08 PM IST

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

தென் மேற்கு பருவக்காற்றின் தீவிரம் ( Monsoon trough) இமய மலை பகுதிகளில் நிலவி வருவதால் அடுத்த இரு தினங்களுக்கு பின், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்க உள்ளது. இதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் மிதான மழை பெய்யும். அதேபோல் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 5 செ.மீ மழையும், தேவாலாவில் 3 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறில் 3 செ,மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னயை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details