சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசுகையில்,"டிக் டாக் செயலியானது ஆபாச வீடியோ பதிவிடுவதால், சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. எனவே அதை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
'டிக் டாக் செயலியை உறுதியாக தடை செய்வோம்..!' - அமைச்சர் மணிகண்டன் - தடை செய்வோம்
சென்னை: "டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும்" என்று, அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
டிக்-டாக் செயலியை உறுதியாக தடை செய்வோம்!!
அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் மணிகண்டன், "தமிழ்நாட்டில் டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும். டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.