தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்க சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்! - vote

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் வாக்களிக்க சொந்த ஊர் செல்வதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Voters leaving hometown for voting

By

Published : Apr 17, 2019, 10:48 PM IST

தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை அதிக அளவில் மக்கள் புறப்பட்டு செல்வதால் கோயம்பேடு முதல் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் வரை அதிக அளவு கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details