தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயக் கடன் தள்ளுபடி..! - அசரடிக்கும் அமமுக தேர்தல் அறிக்கை - மக்களவை தேர்தல்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் அமமுக போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் பழம்பெரும் கட்சித் தலைமைகளை வாயடைக்கச் செய்துள்ளது.

(அமமுக) டிடிவி தினகரன்

By

Published : Mar 25, 2019, 10:08 PM IST

Updated : Mar 25, 2019, 10:18 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அவைகளை முழுவதுமாக ஓரங்கட்டி தனி தன்மையுடன் சிறப்புமிக்க வகையில் முழுக்க முழுக்க விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் (அமமுக) டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:

  • 1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களுக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை.
  • 2. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
  • 3. கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் கைவிடப்படும்.
  • போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
  • 4. அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.
  • 5. தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்.
  • 6. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.
  • 7. நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
  • 8. ஒவ்வொரு கிராமத்திலும் நீர் நிலைகள் மேம்படுத்தப்படும்.
  • 9. விவசாயத்திற்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும்.
  • 10. பேரிடர் மறுவாழ்வு ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்படும்.
  • 11. தமிழகத்திற்கென்று தனி செயற்கைகோள் அனுப்பபடும்.
  • 12. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 13. மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.
  • 14. மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • 15. கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச Wifi வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (Tablet).
  • 16. ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவித் தொகை.
  • 17. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.
  • 18. ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து.
  • 19. பொறியியல் பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.
  • 20. ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.
  • 21. சமையல் எரிவாயு உருளைக்கு மாதம் 100 ரூபாய் மானியம்.
  • 22. கேபிள் தொலைக்காட்சி கட்டணக் குறைப்பு.
  • 23. கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 2 லட்சம் வரை வணிகக் கடன்.
  • 24. முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக உயர்வு.
  • 25. வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.
  • 26. மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.
  • 27. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் குடியிருப்பு வசதி.
  • 28. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு.
  • 29. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு வசதி.
  • 30. தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லாக் கடன்.
  • 31. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.
  • 32. கச்சத்தீவைத் திரும்பப்பெறச் சட்ட நடவடிக்கை.
  • 33. மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை.
  • 34. மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்.
  • 35. நிஷிஜி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
  • 36. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.
  • 37. சில்லறை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களுக்கு எடைக்கருவி, ஐஸ்பெட்டி, அலுமினியக் கூடை மற்றும் குடை இலவசமாக வழங்கப்படும்.
  • 38. இளைஞர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
  • 39. ஊராட்சி ஒன்றியம்தோறும் அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்தப்படும்.
  • 40. மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் பொறுப்பில் அமைக்கப்படும்.
  • 41. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை.
  • 42. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க உரியச் சட்டத் திருத்தம்.
  • 43. இஸ்லாமியர்களின் முன்னேற்றம் தொடர்பான நீதியரசர் சச்சார் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைக்குச் சட்ட அங்கீகாரம்.
  • 44. ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  • 45. கிறிஸ்தவராக மதம் மாறும் தலித் சமூகத்தினரின் சலுகைகளும், உரிமைகளும் தொடர சட்ட நடவடிக்கை.
  • 46. ஏழு பேர் விடுதலை மற்றும் இசுலாமிய கைதிகள் விடுதலைக்கு வலியுறுத்தப்படும்.
  • 47. தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.
  • 48. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, குலசேகரப்பட்டிணத்தில் ஏவுகணை ஏவுதளம், மல்லிப்பட்டிணத்தில் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை.
  • 49. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கத் தனி வாரியம்.
  • 50. மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்.
  • 51. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மூடப்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்.
  • 52. மாவட்டத்திற்கென ஒரு தொழிற்பேட்டை.
  • 53. பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை
  • 54. கனிமங்களை அரசே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.
  • 55. ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்.
  • 56. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கவும், கண்காணிக்கத் தனி ஆணையம்.
  • 57. சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை.
  • 58. மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்.
  • 59. கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  • 60. மதுபான உற்பத்தி ஆலைகளுக்குத் தமிழகத்தில் தடை.

இப்படியாக அமமுகவின் டிடிவி தினகரன் வெளியிட்ட பெரிய தேர்தல் அறிக்கையில் திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகள் காலி ஆகும் அளவிற்கு அறிக்கையைத் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

(அமமுக) டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை
(அமமுக) டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை
(அமமுக) டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை
(அமமுக) டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை
Last Updated : Mar 25, 2019, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details