தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை! - athivarathar

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். அவரது வருகையையொட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் காஞ்சிபுரம் வருகை!

By

Published : Jul 12, 2019, 7:58 AM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உலக பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலில் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அவரது தரிசனத்தைக் காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்தக் காட்சியைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

அந்த வகையில் 1979 ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார். அவரை தடபுடலாக வரவேற்க கோயில் நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி காஞ்சி நகரில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details