தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள உள் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் அனல் காற்று வீசும்.
அதேபோல் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.