பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14 ம் தேதி தொடங்கி இன்று (29 ம் தேதி) வரை நடைபெற்றது. இதில் மொழிப்பாடத் தேர்வான தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியம் 2 மணிக்கு துவங்கி 4.45 மணி வரையில் நடைபெற்றன. கணக்கு அறிவியல் சமூக அறிவியல் மற்றும் விருப்பமொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணி வரையில் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு - பத்தாம் வகுப்பு
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிவடைந்தது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்களும் 3,731 மையங்களில் தேர்வை எழுதினர். அதேபோல்152 சிறைவாசிகள் புழல் ,திருச்சி, பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 தேர்வு மையங்களில் எழுதினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்தன. ஆனால் முக்கியப் பாடங்களான கணக்கு மற்றும் அறிவியல் தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.