பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை
2019-05-21 17:29:38
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்றும், முதல் நாளில் விலையில்லாப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019-20ஆம் கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்கள் அனைத்தும் பள்ளித் தொடங்குதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விலையில்லா பொருட்கள், பாடநூல் கழகத்தின் விநியோக மையங்களில் இருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தெந்த மாவட்ட கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 24ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும். 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு முன்னர் அந்தெந்த பள்ளிகளில் நேரடியாக தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் அளிக்கும் பொருட்கள் தேவையான அளவுக்கு பெறப்பட்டுள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளித் தொடங்கும் நாளன்று வழங்க தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். முதல் நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா நோட்டுப்புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்களை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.