புதுச்சேரி திப்பு ராயப்பேட்டை பாண்டி மெரினா கடற்கரையில் உள்ளது புதிய கலங்கரை விளக்கம் . மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கத்தில் தற்போது கப்பல் போக்குவரத்து இல்லாததால் அரசு இதனை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்துள்ளது. மேலும் இங்கு மீண்டும் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தினையும் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரியை நோக்கி குவியும் சுற்றுலா பயணிகள்...! - HOUSE
புதுச்சேரி: புதிய கலங்கரை விளக்கத்தினைப் பார்வையிட பொதுமக்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுல்லா பயணிகள் புதுச்சேரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
![புதுச்சேரியை நோக்கி குவியும் சுற்றுலா பயணிகள்...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2833293-405-1316dc81-ef3b-401b-bb11-7ac2427d05f4.jpg)
புதுச்சேரி
கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று சுற்றுலா பயணிகள் பலரும் புதுச்சேரியின் அழகை ரசித்து புகைப்படங்கள் எடுத்தும் வருவதால் கலங்கரை விளக்கம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கு பார்வையாளகள் நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.