இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
ஏப்ரல் 18 ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு! - தேர்தல் நாளான ஏப்ரல் 18ல் பொது விடுமுறை
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
election
இதில் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Mar 27, 2019, 7:46 PM IST