தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒடிசாவுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய தமிழ்நாடு அரசு - odhisa bhavan

Faani

By

Published : May 13, 2019, 12:23 PM IST

Updated : May 13, 2019, 8:01 PM IST

2019-05-13 12:18:36

சென்னை: ஃபோனி புயலால் பாதிக்கப்பட ஒடிசாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பத்து கோடி ரூபாய் காசோலை இன்று அளிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஃபானி புயல் இம்மாதம் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் பூரி, புபனேஸ்வர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. மக்கள் முன்கூட்டியே அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு மத்திய அரசு நிவாரண நிதியாக 1341 கோடி வழங்கியது.

இந்நிலையில் ஒடிசாவுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் வழங்க தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் சண்முகம், பத்து கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னையில் உள்ள  'ஒடிஷா பவன்' மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியிடம் இன்று வழங்கினார்.

Last Updated : May 13, 2019, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details