மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கைக்கு பல்வேறுத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் பேசும்போது, புதியக் கல்விக் கொள்கை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் இருப்பதால் அதைத் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில் புதியக் கல்விக்கொள்கை தமிழாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து இங்கெல்லாம் கருத்து சொல்லலாம்! - education policy 2019
மத்திய அரசின் புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.
புதியக் கல்விக் கொள்கை தொடர்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க, "மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6" என்னும் முகவரியிலும், மின் அஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க secert.nep2019@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மேலும் 7373003359 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். தேசியக் கல்விக் கொள்கை மீது வரும் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.