4:23
- பேரவை முடிவடைந்தது.
4:00
- 2.34 கோடியில் பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் ஒரூர்தி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3:51
- ரூ.1.26 கோடி செலவில் சேலத்தின் மின் ரோந்து நடைமுறை அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் ஆணையரகத்தில் செயல்படுத்தப்படும்.
3:49
- ரூ.25 லட்சம் செலவில் காவல் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய பகுதிகளில் தானியக்கமாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3:47
- காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவல்துறையினருக்கு மாதம் 5 லிட்டர் பெட்ரோலுக்கு உண்டான செலவு, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3:47
- ரூ.91.74 லட்சம் செலவில் திருப்பூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3:44
- தீயணைப்பின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3:43
- ரூ. 1 கோடி செலவில் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளை வானிலிருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும் என அறிவிப்பு
3:34
- காவல் துறையினருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் இது தொடங்கப்பட்டுள்ளது - முதல்வர்
3:17
- ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திட்டம் போட்டீர்கள் என அனைவருக்கும் தெரியும் என திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
2:55
- குட்கா வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி தான் சிபிஐ-க்கு மாற்றினார்: முதலமைச்சர்
2:25
- புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நிர்வகிக்க தனி அலுவலர் நியமிக்கப்படுவார் - முதலமைச்சர் தகவல்
1:42
- செயின் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க 2 லட்சம் கேமராக்கள் சென்னையில் பொருத்தப்படும் என முதலமைச்சர் தகவல்
1:36
- ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோரின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு செயல்பட்ட 36 இளைஞர்களை நல்வழிபடுத்தும் முறைகள் நடைபெற்று வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.