தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்! - TN 10th Exam Result District vise percentage

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. மேலும், எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளன.

10ஆம் வகுப்பு பொது மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்!

By

Published : Apr 29, 2019, 2:38 PM IST

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வு இயக்ககம் இன்று காலை வெளியிட்டது. இதில் மொத்தம் 95.2 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 97 விழுக்காடு மாணவிகளும், 93.3 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்!

பாட வாரியாக தேர்ச்சி விழுக்காட்டில் மொழிப்பாடங்களில் 96.12 விழுக்காடும், ஆங்கிலத்தில் 97.35 விழுக்காடும், கணிதத்தில் 96.46 விழுக்காடும், அறிவியல் 98.58 விழுக்காடும் மற்றும் சமூக அறிவியலில் 97.07 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்!

மாவட்ட வாரியான தேர்ச்சியில் 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடமும், 98.48 விழுக்காடு பெற்று ராமநாதபுரம் இரண்டாவது இடத்திலும், 98.45 நாமக்கல் மூன்றாவது இடமும் பெற்றுள்ளன. இதில் வேலூர் 89.98 விழுக்காடுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்
மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்
மாவட்ட வாரியான விழுக்காடு விவரம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details