கடந்த ஆண்டு காவலரைத் தாக்கிவிட்டு, வாக்கி டாக்கியை பறித்துச் சென்ற திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(22) என்ற ரவுடியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கடந்த நிலையில், ஆனந்தன் நினைவாக அவரது நண்பர்கள் என்கவுண்டரில் தனது நண்பனைச் சுட்ட காவல்துறையினரை பழிவாங்க காத்திருப்பதாகக் கூறி, கானா பாடல் பாடி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
டிக்டாக்கில் பாடல் பாடி போலீசாருக்கு சவால்: 6 பேர் கைது - டிக்டாக்கில் போலீசாருக்கு சவால்
சென்னை: காவல்துறையினருக்கு சவால் விடும் விதமாக டிக்டாக்கில் பாடல் பாடிய நபர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்டாக்
டிக்டாக்கில் காவல்துறையினருக்கு சவால் விட்டு பாடல் பாடியவர்கள்
இதையறிந்த காவல்துறையினர், பாடல் பாடிய நபர்களான சுரேஷ்குமார், விஜய் சமீர் பாஷா, கார்த்திக், பிரசாத், பாடகர் மணிகண்டன் உட்பட ஆறு பேரைக் கைது செய்தனர். இதன்பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.