தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 படிப்புகள் - fisheries university

சென்னை: டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல் என மூன்று புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

Fisheries

By

Published : May 14, 2019, 9:36 AM IST

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதியதாக மூன்று இளநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன. இது குறித்து அதன் துணைவேந்தர் பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் 160 இடங்கள், இளநிலை மீன்வளப் பொறியியல் 30 இடங்கள், உயிர் தொழில்நுட்பவியல் 40 இடங்கள், உணவுத் தொழில்நுட்பவியல் 40 இடங்கள், இளநிலை தொழிற்கல்வி 25 இடங்கள் ஆகிய பட்டப் படிப்புகள் உள்ளன.

மேலும் இந்த ஆண்டு மூன்று பட்டப்படிப்புகள் புதியதாக தொடங்கப்படுகின்றன. இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் 40 இடங்கள், மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் 20 இடங்கள், வணிக நிர்வாகவியல் 20 இடங்கள் ஆகிய நான்கு வருட பி.டெக்., பி.பி.ஏ. பட்டப்படிப்புகள் அளிக்கப்பட உள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்பட்டு, ஜூலை இரண்டாவது வாரத்தில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் 04365-256430, 94426 01908 ஆகிய எண்களின் மூலம் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details