சென்னை திருநின்றவூரில் பக்தவச்சல பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 ஆம் நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று சாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் திருநின்றவூர் தேர் திருவிழா - thiruninravur bhaktavatsala perumal temple
சென்னை: திருநின்றவூர் அருகே பக்தவச்சல பெருமாள் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருநின்றவூர் தேர் திருவிழா
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வட பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த திருவிழாவையொட்டி ஆங்காங்கே பஜனைப் பாடல்கள், கோலாட்டம் ஆகியவை நடைபெற்றன. மேலும் பக்தர்களுக்கு பசியாற்ற அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.