அமமுக முக்கிய நிர்வாகியாக வலம் வந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, அவர் திமுகவில் இணைவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இணைந்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ’தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே நல்ல தலைவராக திகழ்ந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவார். எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய நிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார். எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என அதிமுகவிலிருந்து வந்தவர்களை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார்.
திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் கட்சி என்றால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக முட்டிமோதிக்கொண்டிருக்கிறது. பாஜாகவால் இயக்கப்படும் அதிமுகவிற்கு தன்மானத்தை விடுத்து செல்ல விரும்பவில்லை.
செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செலவன் தலைவர் கலைஞர் இறந்தபின், இரே இரவில் கடற்கரையில் நினைவிடம் அமைக்க நீதிமன்றம் மூலம் இடம் வாங்கிய தைரியம், ஆர்.கே.நகர் தோல்விக்கு பிறகும், தமிழ்நாடு மக்களுக்காக போராடுவது திமுக தான் என்ற பெயரெடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்துள்ளேன். தேனியில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் வைத்து மற்ற உறுப்பினர்களை திமுகவுக்கு அழைத்து வரவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.