தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TET exam date extend till April 12

By

Published : Apr 5, 2019, 12:34 PM IST

ஆரம்பப்பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேவைக்கேற்ப நடத்திவருகிறது.

2019ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் மார்ச் 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகப்படுகிறது. இதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடையும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கடைசி நேரத்தில் இன்று அனைவரும் விண்ணப்பித்ததால், இணையதளம் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details