தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஓரிரு நாட்கள் மட்டுமே நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் காரணமாக துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் இருந்தது.
இதனிடையே, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடவுள்ளது.