தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதவி தாகத்துக்காக தண்ணீரை அரசியலாக்கும் ஸ்டாலின் - தமிழிசை சவுந்தரராஜன் - Tamilisai critise Stalin

சென்னை: தன்னுடைய பதவி தாகத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின், தண்ணீரை அரசியலாக்குகிறார் என, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பதவி தாகத்துக்காக தண்ணீரை அரசியலாக்கும் சிங்கப்பூர் ஸ்டாலின் -தமிழிசை சவுந்தரராஜன்

By

Published : Jun 25, 2019, 11:05 PM IST

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்’.

‘சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸின் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று வலியுறுத்தி விட்டு இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம்’ என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ‘மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details