தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மற்றவர்கள் பணத்தைக் கொடுக்க, நான் குணத்தைக் கொடுத்துள்ளேன் - வெற்றியுடன் திரும்புவேன்' - தமிழக பாஜக தலைவர்

சென்னை: தூத்துக்குடியில் வெற்றியுடன் திரும்புவேன் என்று சென்னையில் வாக்களித்த பின் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்

By

Published : Apr 18, 2019, 7:21 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம், காவேரி உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தேர்தல் என்பது திருவிழா. அனைவரும் கொண்டாட வேண்டும். வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தற்போது வாக்குப்பதிவை செலுத்திவிட்டு நான் போட்டியிடும் தூத்துக்குடிக்குச் செல்கிறேன். வெற்றி முகத்தோடு திரும்புவேன்.

தகவல் இல்லாமல் வருமானவரித் துறையினரின் சோதனை நடக்காது. அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். பொதுமக்களுக்கு நிரந்தர உதவியை செய்ய நினைக்கிறோம். ஆனால் சிலர் அவர்களுக்கு தற்காலிக உதவிகளை செய்து வாக்கு வாங்க முயற்சிக்கின்றனர்.

மற்றவர்கள் பணத்தை கொடுக்க, நான் அவர்களிடம் குணத்தை கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'மற்றவர்கள் பணத்தை கொடுக்க, நான் குணத்தை கொடுத்துள்ளேன் - வெற்றியுடன் திரும்புவேன்'

ABOUT THE AUTHOR

...view details