தமிழ்நாட்டில் நீண்ட காலமாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதற்கான முயற்சிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, லோக் ஆயுக்தா அமைப்பிற்கான பொறுப்புகள் நிரப்பப்பட்டன. அதன்படி,
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனம் - தமிழ்நாடு லோக் ஆயுக்தா
சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை உறுப்பினர்களாக மாவட்ட முன்னாள் நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறை அல்லாத (Non Judicial) உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம் மற்றும் வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும் நிலையில், இவர்களின் நியமனம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.