காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு, பிஎஸ்என்எல் சார்பாக சிறப்பு வசதிகள் கொண்ட ப்ரீபெய்டு சிம் கார்டு 250 ரூபாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அமர்நாத் யாத்திரை செல்வோர் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரிகர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் சிம் - பிஎஸ்என்எல் அறிவிப்பு - bsnl new sim
சென்னை: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்யச் செல்லும் யாத்திரிகர்களுக்கு உதவும் வகையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய சிம் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் அறிவிப்பு
ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழங்கப்பட்டுவரும் இந்த புதிய சிம் கார்டை ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டு வசதிகளுக்காக மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் பிஎஸ்என்எல் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.